பக்தி வைபவ ( ஆன் லைன் )

Dates:

2024-07-01 To 2025-12-01

Registration Closed

நாள் : 1 July 2024 

நாள்கள்:  Weekly 3 Days.

நேரம் : மாலை 6.30 முதல்  8.30 வரை.

புஸ்தகம் : ஸ்ரீமத் பாகவதம் முதல் ஸ்கந்தம் முதல் ஆறாவது ஸ்கந்தம் வரை.

மொழி : தமிழ்

வகுப்பு நேரம் : 2 மணி நேரம் ஒரு வகுப்பிற்கு.

கட்டணம் : 10,000 ரூபாய்.

பதிவிற்கான கடைசி நாள்: இடங்கள் முடியும் வரை.

 

இந்த தொடர் வகுப்பினை பற்றி.

 ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் ஆறு காண்டங்களின் ஆழமான கல்வி முறையான இந்த பாட திட்டத்தில் பக்தி சாஸ்த்ரி கல்வியினை முடித்த எவரும் சேரலாம்.இந்த பாடதிட்டம் முதல் பாகம் ( ஓன்று முதல் மூன்றாவது ஸ்கந்தம் வரை) மேலும் இரண்டாவது பாகம்  (நான்கு முதல் ஆறாவது பாகம் வரை) ஆக போதிக்கப்படுகிறது.இந்த கல்வி முறையானது பதிவு செய்த மாணவர்கள் மட்டும் பெறுவதற்குறிய பூர்வாங்கமான சுய படிப்பு முறையினை கொண்டதாகும்.இந்த பூர்வாங்ககல்விமுறையானது வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு முன்பே நீங்கள் பதிமூன்று வாரங்கள் இதை கற்கும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் நீங்கள் முன்னதாகவே இதை கற்க வேண்டிய ஒன்றாகும்.பூர்வாங்க சுய மாணவர் கையேடு உங்கள் வகுப்புகளுக்கு முன்பே நீங்கள் பதிவு செய்த உடன் உங்களுக்கு அனுப்பப்டும்.

 

பாடத்திட்டத்திற்கான தேவைகள்.

 

பக்தி சாஸ்திரி பட்டம் விளக்கமான மதிப்பெண்கள் பட்டியலுடன் மேலும் வருகை பதிவேடுடன்.

 

மாணவர்கள் பதினாறு மாலைகள் ஜபம் செய்ய மற்றும் நான்கு ஒழுக்க விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

உங்களை அறிந்த ஒரு இஸ்கான் அதிகாரி நீங்கள் பகவான் சைதன்யரின் பிரச்சார இயக்கத்தில் குறைந்தது பன்னிரண்டு மாதங்கள் அனுகூலமான முறையில் சேவையில் ஈடுபட்டுள்ளீர்கள்   என பரிந்துரை செய்ய வேண்டும்.

பாடத்திட்டம் ஆரம்பமாகும் முன்பே ஸ்ரீமத் ஸ்கந்தம் ஓன்று முதல் மூன்று வரையான மூன்று புஸ்தகங்களினை பாகம் ஒன்றினை கற்க விரும்பும் மாணவர்கள் படிக்க வேண்டும்.இது ஒரு அவசியாமான ஒன்றாகும் ஏனெனில் இந்த பாடத்திட்டம் புஸ்தகங்களினை அடிப்படையாக வைத்த கலந்துரையாடல்கள் , விவாதங்கள் மற்றும் குழு செயல்பாடுகள் கொண்டதாகும். இதனால் இந்த பாடத்திட்டத்தில் பங்கு பெற்று முழு பலனை அடைய நீங்கள் கண்டிப்பாக புஸ்தகங்களினை படிக்க வேண்டும்.

நீங்கள் பதினெட்டு வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவராக இருக்க வேண்டும்.

நிதிப்பங்களிப்பு.

இந்திய ரூபாய் 10.000.

 

உங்களுக்கு மேலும் கேள்விகள் எதேனும் இருப்பின் எங்களை அணுகலாம்.

போன்

மின் அஞ்சல்- admissions@mayapurinstitute.org

+91 8973645108 / +91 9474665658 

 

Attached Files: